ஆர்.எஸ்.எஸ். குணம் தெரியுமா..! முதலமைச்சருக்கு சவால் விட்ட சூர்யா சிவா!

ஆர்.எஸ்.எஸ். குணம் தெரியுமா..! முதலமைச்சருக்கு சவால் விட்ட சூர்யா சிவா!

ஆர்.எஸ்.எஸ் பேரணி சர்ச்சையாகியுள்ள நிலையில், அது குறித்து பல முக்கிய கருத்துக்களை கூறியுள்ளார் பாஜகவை சேர்ந்த சூர்யா சிவா.

ஆர்.எஸ்.எஸ்.பேரணி:

காந்தி ஜெயந்தியன்று தமிழகம் முழுவதும் 51 இடங்களில் பேரணி நடத்த அனுமதி கேட்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் தமிழக காவல்துறையிடம் முறையிடப்பட்டது. அதற்கு அனுமதி அளித்திருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி பேரணியை நவம்பர் 6 ஆம் தேதி நடத்திக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையும் படிக்க: அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிடக் கூடாது...ஈபிஎஸ் திட்டவட்டம்!

நித்தியானந்தா தர்மரட்சகர்:

பாஜகவின் பிசி அணி மாநிலச் செயலாளர் சூர்யாவுக்கு நித்தியானந்தா தர்மரட்சகர் விருதை நித்தியானந்தா அறிவித்து இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 

100 % மகிழ்ச்சி:

இது குறித்து பேசிய சூர்யா சிவா, இதில் எனக்கு 100% மகிழ்ச்சி.. திராவிட சித்தாந்தத்தில் இருந்து வந்து பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதத்தைப் பாதுகாத்துப் பேசுவதால் இந்த விருதைக் கொடுத்து உள்ளனர். பெரும்பான்மையாக இருந்த போதிலும், இந்து மதம் குறித்துப் பேச யாருமே இல்லை என்பதே உண்மையான நிலையாக உள்ளது. தமிழ்நாட்டில் இப்படியொரு சூழல் தான் நிலவி வருகிறது" எனக் கூறியுள்ளார்.

முதல்வரே நினைத்தாலும் முடியாது:

ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்து தமிழ்நாட்டில் பல விவாதங்கள் நடந்து வரும் நிலையில், அது குறித்து பேசிய சூர்யா சிவா, "ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவே கூடாது என்று நினைக்கலாம்.. ஆனால் 100 சதவீதம் இது நடக்கும்.. யாராலும் தடுக்க முடியாது.. எந்த சூழ்நிலையிலும் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தே தீரும். திருமாவளவன் அல்ல தமிழக முதலமைச்சரே நினைத்தாலும் தடுக்க முடியாது எனக் கூறி இருப்பது கவனம் பெற்றுள்ளது.