கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு.. என்ன காரணம் தெரியுமா?

கோடை வெயிலின் தாக்கம் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை கனிசமாக உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை உயர்வு.. என்ன காரணம் தெரியுமா?

கோயம்பேடு சந்தையில் இருந்து அண்டை மாவட்டங்கள் ஆக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் விநியோகம் செய்யப்படும்.

மேலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா,கர்நாடகா மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து இருக்கும்.

இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் காரணமாக வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய லாரிகள் கட்டணம் உயர்ந்துள்ளதால் காய்கறி விலை என்பது உயர்ந்துள்ளது.

மேலும் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்கறிகள் வரத்து  குறைந்துள்ளது. இதன் காரணமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது என்று  மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் ராஜசேகர் கூறினார். 

குறிப்பாக தக்காளி  உள்ளிட்ட அனைத்து  காய்கறிகளின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார்.