மருத்துவர் சைமன் உடல் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் உடல் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது.

மருத்துவர் சைமன் உடல் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் உடல் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 20-ஆம் தேதி உயிரிழந்த மருத்துவர் சைமன் உடல் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போரட்டம் நடத்தினர். இதனால் வேலங்காடு மயானத்தில் சைமன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.  சைமனின் உடல் கீழ்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்ய வேண்டும் என சைமன் உறவினர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதி, சைமன் உடலை மறு அடக்கம் செய்ய உத்தரவிட்டார். 

இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த சென்னை மாநகராட்சியின் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதனால், வேலங்காடு மயானத்தில் இருந்து எடுக்கப்பட்ட சைமன் உடல் இன்று கீழ்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட்டது.