"சபாஷ்".. 525 கிராம் எடையுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை

525 கிராம் எடையுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர்.

"சபாஷ்".. 525 கிராம் எடையுடன் மிகவும் மோசமான நிலையில் இருந்த பச்சிளம் குழந்தையை காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை

நாமக்கல் கணேசபுரத்தைச் சேர்ந்தவர்கள் சாதனா - விக்னேஷ் தம்பதி.

இவர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  சேலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம்  இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. மிகவும் எடை குறைவுடன் இருந்த அந்த குழந்தைகளுக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ஆனால் குழந்தைகளின் உடல் நிலையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிகிறது. செலவு வீதம் அதிகரித்ததை தொடர்ந்து, கலக்கம் அடைந்த பெற்றோர், குழந்தைகளை  நாமக்கல் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தையை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

அதன்விளைவாக, குழந்தையின் எடை 525 கிராமிலிருந்து,  தற்பொழுது ஒரு கிலோவுக்கு மேல் எடை அதிகமாகி ஆரோக்கியத்துடன் உள்ளது. இந்நிலையில், மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் குழந்தையை பார்வையிட்டதோடு, குழந்தையின் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.