" ஏழை மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய, திராவிட மாடல் அரசு...." - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு

தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய திராவிட மாடல் அரசு, தொடர்ந்து இலவசங்களை வழங்கும் - பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு.

" ஏழை மக்களின் பொருளாதாரம் மேன்மை அடைய, திராவிட மாடல் அரசு...." -  பொதுப்பணித் துறை அமைச்சர்  எ.வ.வேலு

திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு கடன் உதவி மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி வழங்கும் விழா நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார். இதில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு ரூ.1 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் 202 சாலையோர வியாபாரிகளுக்கு இலவச தள்ளு வண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு 28 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 4619 பயனாளிகளுக்கு, 5 கோடியே 39 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கப்பட்டுள்ளதாகவும், சாலை ஓரங்களில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு 98 லட்சம் மதிப்பிலான இலவச வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சமூகத்தில் பொருளாதாரம் என்பது சீராக இல்லை என்றும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாக தெரிவித்த அவர், தமிழக அரசாங்கம் இலவசங்களை ஏழை எளிய மக்களுக்கு, தாங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவதற்காக தான் வழங்குவதாக தெரிவித்தார். ஒரு சிலர் இந்த இலவசங்கள் குறித்து கொச்சைப்படுத்தி வருவதாகவும், திராவிட மாடல் ஆட்சி ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சமூகத்தில் உள்ள பொருளாதார ஏற்ற தாழ்வுகளை சரி செய்வதற்காகவும் தொடர்ந்து இலவசங்களை வழங்கும் என தெரிவித்தார், அதோடு தமிழகத்தில் சமத்துவ குடும்பமாகவும், சமூகநீதி குடும்பமாகவும் பார்ப்பதால் தான் தமிழக மக்களுக்கு இலவசங்களை வழங்குவதாகவும் அவர் சுட்டி காட்டினார்.