ஓஎம்ஆரில் 40 சிசிடிவிக்கள்! திறந்து வைத்த துணை ஆணையர்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட 40 சிசிடிவி கேமராக்களின் புதிய கட்டுப்பாட்டு அறையினை பள்ளிக்கரணை துணை ஆணையாளர் ஜோஸ் தங்கையா ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

ஓஎம்ஆரில் 40 சிசிடிவிக்கள்! திறந்து வைத்த துணை ஆணையர்!

தாம்பரம் காவல் ஆணையரகம், செம்மெஞ்சேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் வகையில், ஏற்கனவே 240 சிசிடிவி கேமாரக்கள் பொறுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், ஓஎம்ஆர் சாலையில் உள்ள டாலர் சந்திப்பில் 7 கேமராக்கள், சோழிங்கநல்லூர் சந்திப்பில் 8 கேமராக்கள், ஆவின் சிக்னலில் 11 கேமராக்கள், புதிய காவல் நிலையம் அருகே சர்வீஸ் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் 6 கேமராக்கள், குமரன் நகர் சிக்னலில் 6 கேமராக்கள், ஷெல் பெட்ரோல் பங்க் அருகே 4 கேமராக்கள் என IP 5 மெகா பிக்சல் கொண்ட (High resolution) மொத்தம் 40 கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.

இந்த கேமராக்களின் கட்டுப்பாட்டு அறையை பள்ளிகரணை காவல் துணை ஆணையர் ஜோஸ் தங்கையா, ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, இவற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை கண்டறியும் வகையிலும் புதிதாக பொறுத்தப்பட்டுள்ள 40 சிசிடிவி கேமராக்களின் பயன்பாட்டை டிவி ஸ்கிரின் மூலம் பார்வையிட்டு 40 கேமராக்களை வாங்கிகொடுத்த போஃர்டு கார் நிறுவனம் மற்றும் என்.சி.சி. ஹர்பன் நிறுவனத்திற்கு துணை ஆணையர் நன்றியை தெரிவித்தார்.

மேலும் ஓஎம்ஆர் சாலையில் இன்று பயன்பாட்டிற்கு கொண்டுவந்த 40 சிசிடிவி கேமராக்களும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு பொறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அப்பொழுது செம்மஞ்சேரி காவல் உதவி ஆணையர் ரியாசுதீன், குற்றப்பிரிவு ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.