ப்ளூ ஃபிளாக் பீச்சில் 500 மரக்கன்றுகள் நட்ட சுற்றுலா பயணிகள்!

உலக சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு கோவளம் நீலக்கொடி (ப்ளூ ஃபிளாக் பீச்) கடற்கரையில் சுற்றுலா பயணிகளால் 500 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

ப்ளூ  ஃபிளாக்  பீச்சில் 500 மரக்கன்றுகள் நட்ட சுற்றுலா பயணிகள்!

உலக சுற்றுலா தினம் மற்றும் தமிழக சுற்றுலாத்துறையின் 50வது பொன்விழா ஆண்டை முன்னிட்டும் செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் ப்ளூ  ஃபிளாக்  பீச் (நீலக்கொடி-Blue Flag Beach) கடற்கரையில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் 500 நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது.

மேலும் படிக்க | விவசாயிகள் சங்கம் சார்பில் இலவச மண்வெட்டி வழங்கும் விழா!!

மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அங்கு வருகை தந்திருந்த சுற்றுலா பயணிகளை கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். சுற்றுலா பயணிகள் மற்றும் ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.

மேலும் படிக்க | பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு...அதிரடி காட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களால் மரக்கன்றுகளை நட்டதாக மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்தர். உடன் முதலையார் குப்பம் மற்றும் முட்டுகாடு படகு குழாம் மேலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.