இபிஎஸ் எடுத்த முடிவு..! இது எதிர்பார்க்கப்பட்ட முடிவு தான்..!

இபிஎஸ் எடுத்த முடிவு..! இது எதிர்பார்க்கப்பட்ட முடிவு தான்..!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கில் தனிநீதிபதியின் தீர்ப்பு ஓபிஎஸ்க்கு சாதகமாக வந்துள்ளதை அடுத்தது, இபிஎஸ் ஒரு முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

உயர்நீதிமன்றம் -உச்சநீதிமன்றம்: 

கடந்த மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தை செல்லாது என அறிவிக்க முடியாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி, 2 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது.

மேலும் படிக்க: திமுகவை ஆதரிக்கிறாரா ஓபிஎஸ்...முன்னாள் அமைச்சர் சர்ச்சை பேச்சு!

நீதிபதி மாற்றம்:

அதிமுக பொதுக்குழு வழக்கில், அனைத்து தீர்ப்புகளும் இபிஎஸ்க்கு சாதகமாக வருவதாக கருதிய ஒபிஎஸ், தனி நீதிபதி கிருஷ்னன் ராமசாமியை மாற்ற வேண்டி உயர்நீதிமன்ற நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரிக்கு வேண்டுகோள் விடுத்து மனு தாக்கல் செய்தார். அதன் அடிப்படியில், அதிமுக பொதுக்குழு வழக்குஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில்,  நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது. 

அதிரடி தீர்ப்பு:

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், ஆகஸ்ட் 17 காலை 11.30 மணிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கினார். அதில், ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதல் இல்லாமல் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்தது ரத்து செய்யப்படுவதாகவும் பரபரப்பு தீர்ப்பளித்தார்.  

தருமம் மீண்டும் வெல்லும்:

சட்டத்தை மட்டுமே நம்பிக்கொண்டு காத்து இருந்த ஓபிஎஸ்க்கு இந்த தீர்ப்பு பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அவரது தொண்டர்கள் மேள தாளங்கள் முழங்க, வெடி வெடித்தும் வெற்றியைக் கொண்டாடினர். இரண்டாவது தர்ம யுத்தத்திலும் வெற்றி பெற்ற ஓபிஎஸ், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதையை செலுத்தினார். அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும். ஒன்றரை கோடி தொடர்களை அரவணைத்து செல்வேன் என ஓபிஎஸ் மகிழ்ச்சி போங்க கூறிருந்தார். 

மேலும் படிக்க: இபிஎஸ் அடுத்து செய்யப்போவது என்ன? இபிஎஸ்க்கு 3 வழிகள் தான்..!

இபிஎஸ் ஆலோசனைக் கூட்டம்:

உய்ரநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இபிஎஸ்க்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இபிஎஸ் இல்லத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வளர்மதி உள்ளிட்ட இபிஎஸ் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். 

இபிஎஸ் முடிவு:

ஆலோசனைக்கு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து  மேல்முறையீடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.