டெல்லி செல்லும் ஈபிஎஸ்.. தேர்தல் ஆணையம் செல்வாரா? அல்லது... வேறெங்கும் செல்வாரா?

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்திக்க திட்டம்..!

டெல்லி செல்லும் ஈபிஎஸ்.. தேர்தல் ஆணையம் செல்வாரா? அல்லது... வேறெங்கும் செல்வாரா?

டெல்லி புறப்படும் ஈபிஎஸ்:

அதிமுகவில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில், டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

தேர்தல் ஆணையத்தில் மனுவா?

டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிசாமி மனு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முன்னாள் அமைச்சர்கள்:

அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மாநிலங்களவை எம்.பி. சிவி சண்முகம் ஆகியோர் சென்றுள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த தகவலும் இதில் வெளியிடப்படும் எனக் கூறப்படுகிறது.