முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டிய ஈபிஎஸ்..! தொடக்கூட முடியாதாம்..!

முதலமைச்சர் ஸ்டாலினை சீண்டிய ஈபிஎஸ்..! தொடக்கூட முடியாதாம்..!

அதிமுகவில் நடைபெற்று வரும் உட்கட்சி பிரச்சனையில், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரும் மாறி மாறி விமர்சித்தும், குற்றம்சாட்டியும் வருகின்றனர்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்:

அதிமுகவில் ஒற்றை தலைமை கோசம் எழுந்தது முதல் கட்சி இரு அணிகளாக பிரிந்து விட்டது. கட்சியும், அதிகாரமும் யாருக்கு என்பதில் இருவரும் நீதிமன்றத்தை நாட, நீதிமன்ற தீர்ப்பு இருவருக்கும் மாறி மாறி சாதகமாக வந்துகொண்டுள்ளதால், அதிமுகவில் அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

அழைப்பு - மறுப்பு:

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஆகஸ்ட் 17 இல் தீர்பளித்ததை அடுத்து, அனைவரும் இணைந்து செயல்படுவோம், கூட்டுத் தலைமையில் கட்சியை வழிநடத்துவோம் என சசிகலா, தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுத்திருந்தார் ஓபிஎஸ். ஆனால், அவரின் அழைப்பை திட்டவட்டமாக நிராகரித்த ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் இணைவு சாத்தியமே இல்லை எனக் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: ஆ.ராசாவை குறிவைத்த பாஜக… பின்வாங்கிய ஆ. ராசா

அண்ணா பிறந்தநாள்:

பேரறிஞர் அண்ணாவின் 114 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை வடபழனியில் அதிமுகவின் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் 5000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக் கூட்டம்  நடைபெற்றது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னையை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

திமுக எதிர்ப்பு:

நிகழ்ச்சியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சிகளை திமுக அரசு நசுக்க பார்க்கிறது எனக் குற்றம்சாட்டினார். மேலும், அதிமுக தொண்டர்களை ஸ்டாலினால் தொட முடியாது எனவும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முழுவதும் ஈபிஎஸ் கைக்கு சென்ற தலைமை அலுவலகம்..!

தலைவன் நான் அல்ல:

ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் மீண்டும் இணைந்து அதிமுகவை வழிநடத்துவர்களா என்ற விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு, ஓபிஎஸ் மன்னிப்புக் கேட்டாலும் தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அதே போல, நேற்றும், ஓபிஎஸ்சுடன் ஒன்று சேர்வதும் ஒற்றுமையுடன் செயல்படுவதும் நிச்சயம் நடைபெறாது என அழுத்தமாக தெரிவித்த அவர், அதிமுகவில் தொண்டன் தான் தலைவன் எனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.