"எடப்பாடி பழனிச்சாமியே தலைமையேற்க வேண்டும்" அதிமுக இளைஞரணி செயலாளர் சிவபதி திட்டவட்டம்!
அதிமுகவுக்கு எடப்பாடி பழனிச்சாமியே தலைமையேற்க வேண்டுமென அதிமுக இளைஞரணி செயலாளர் சிவபதி அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பினருக்கு கட்சியில் இருந்து பலர் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒற்றைத் தலைமை முறைக்கு ஓபிஎஸ் ஒப்புதல் தெரிவிப்பதுதான் நல்லது என முன்னாள் அமைச்சரும் அதிமுக இளைஞரணி செயலாளருமான சிவபதி தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசிய பிறகு பேட்டியளித்த அவர், ஒற்றைத் தலைமை வந்தே ஆக வேண்டும் எனவும் பொதுக்குழுவில் என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பாருங்கள் எனவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் ஆதரவை இபிஎஸ்தான் பெற்றுள்ளார் எனக் கூறிய அவர், இபிஎஸ் மட்டுமே கட்சிக்கு ஒரே தலைமையாக வர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.