இலங்கை வசம் உள்ள படகுகளை விரைவில் மீட்க நடவடிக்கை...எல்.முருகன் உறுதி!

இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாச்சார மையத்தின் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் 3 நாள் சுற்றுப்பயணமாக இலங்கைக்கு சென்றனர்.
இதையும் படிக்க : 2வது நாளாக கொடி அணிவகுப்பு நடத்திய துணை இராணுவப் படையினர்...!
இந்நிலையில் இன்று அதிகாலை சென்னை திரும்பிய அமைச்சஎ எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பது தொடர்பாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சவார்த்தை நடத்தியதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், காதலர் தினத்தன்று பசுக்களை கட்டிப்பிடிக்கும் தினமாக கொண்டாட வேண்டும் என கூறிய விலங்குகள் நல வாரியம் ஒரு தன்னிச்சையான அமைப்பு. அது பசுக்களை அரவணைக்கும் நோக்கில் அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது எனத் தெரிவித்தார்.