நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்...எல்.முருகன் உறுதி!!

நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் என்று பாஜக மாநில தலைவர்  எல்.முருகன் கூறியுள்ளார் 

நவம்பர் மாதத்திற்குள் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும்...எல்.முருகன் உறுதி!!

பாஜகவின் மூத்த தலைவர் கே.எல்.லட்சுமணன் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், மோடியின் தலைமையில் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ச்சியை சந்தித்துள்ளதாக தெரிவித்தார். அந்த நிலையில்தான் முதல் அலை தாக்கம் ஏற்பட்டது அதை சிறப்பான முறையில் கையாண்டு கட்டுப்படுத்தப்பட்டது என்றும் கொரோனாவின் இரண்டாம் அலையும் பல மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக கூறினார்.

தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த மாதம் 20 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.  இதேபோல் இந்த மாதத்திற்கு இரட்டிப்பாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.  குறிப்பாக ஓரிரு நாட்களில் மேலும் ஒரு லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்தை வந்தடையும் என்றும் எல்.முருகன் கூறினார். தடுப்பூசி வழங்குவது மாநிலத்தின் மக்கள் தொகை, அங்கு உள்ள பாதிப்பு சதவீதம், தடுப்பூசி பயன்படுத்தும் விதம் ஆகியவற்றை கணக்கில் கொண்டே வழங்கப்பட்டு வருவதாக கூறிய முருகன், தமிழகத்தில் தடுப்பூசிகள் அதிக அளவு வீணாக்கப்படுவதாக கூறினார். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் தான் என குற்றம்சாட்டினார்.  

 தற்போது அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்து கொண்டிருக்கின்றனர் என்றும் செங்கல்பட்டு தடுப்பூசி மையம் ஒன்றும் லாரி மெக்கானிக் ஷாப் கிடையாது.  அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த அதை ஆய்வு செய்து சரியான நேரத்தில் மத்திய அரசு அனுமதி வழங்கும் தேவைப்பட்டால் மத்திய அரசு ஏற்று நடத்த வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலா ஆடியோ விவகாரம் குறித்து பேசிய போது தனது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் அதை அவர்கள் சரி செய்து கொள்வார்கள் என்று தெரிவித்தார் அதேபோல் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார்.