தவறான சிகிச்சையால் கண் பார்வை பாதிக்கப்பட்ட பெண்...!

தவறான சிகிச்சையால் கண் பார்வை பாதிக்கப்பட்ட பெண்...!

கடலூர் அரசு மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் பெண்ணின் கண்கள் பாதிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சையால் கண்பார்வை பாதிப்பு:

கடலூர் மாவட்டம் துறைமுகம் சான்றோர் பாளையத்தை சேர்ந்த உமாவதி மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கருப்புத்துணியால்  கண்ணைக்கொண்டு இன்று கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கடலூர் அரசு மருத்துவமனையில் தனக்கு மூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சைக்கு பிறகு எனது வலது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிக்க: இந்தியாவிற்கே முன்னோடியாக அமையும் தமிழகம்...முதலமைச்சர் பெருமிதம்!

உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்:

மேலும், இதுகுறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவரிடம் கேட்டபோது, சிறிது காலத்தில் கண் பார்வை சரியாகி விடும் என்று கூறியதாகவும், ஆனால் இன்று வரை தனது கண்கள் சரியாகவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் இதுபோன்ற ஒழுங்கற்ற அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனையில் நடப்பதை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.