மதுரையில் உலா வரும் போலி நிருபர்கள்- மக்களை மிரட்டி பணம் பறிப்பு...

மதுரையில் நிருபர்கள் என கூறி பணம் பறிப்பில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.

மதுரையில் உலா வரும் போலி நிருபர்கள்- மக்களை மிரட்டி பணம் பறிப்பு...

மதுரை தல்லாகுளம் பகுதியில் சித்தா ஆயுர்வேத மசாஜ் மையம் நடத்தி வருவர் ராமகிருஷ்ணன். இவர் தனது ஆயுர்வேத மசாஜ் தொழிலை பல வருடங்களாக நேர்த்தியான முறையில் செய்து வருகிறார். இதற்கிடையில் இந்த ஆயுர்வேத மசாஜ் நிறுவனத்திற்கு சென்ற மூன்று பேர் தங்களை நிருபர்கள் என கூறியுள்ளனர். பின்னர் மசாஜ் நிறுவனத்திற்கு இதுவரை லைசன்ஸ் பெறாமல் தொடர்ந்து நடத்திகொண்டிருக்கிறிர்கள், ஆகையால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடும் என கூறியுள்ளனர்.

மேலும் ஆட்சி தலைவரிடம் புகார் தெரிவித்தால் உடனடியாக உங்கள் நிறுவனத்தை சீல் வைத்துவிடுவர். ஆகையால் எங்களை கவனியுங்கள் நாங்கள் விட்டுவிடுகிறோம் என்று அவர்களது பாணியில் பேசி உள்ளனர். ராமகிருஷ்ணனும் அவர்களை உண்மையான செய்தியாளர்கள் என நம்பி முதற்கட்டமாக அவர்களுடைய மிரட்டலுக்கு அஞ்சி பத்தாயிரம் ரூபாய் கொடுத்துள்ளார் பின்பு 40 ஆயிரம் ரூபாய் google.pay மூலம் அனுப்பியுள்ளார்.

பணத்தை வாங்கி சென்றவர்கள் ராமகிருஷ்ணனை மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர், அதில் நாங்கள் உங்களிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டோம், ஆனால் நீங்கள் 50 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் கொடுத்துள்ளீர்கள். ஆகையால் மீதம் 50 ஆயிரம் ரூபாய் நீங்கள் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சிக்குள்ளான ராமகிருஷ்ணன் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்வது என்பது தவறான ஒன்று, நான் உங்களை போலீஸிடம் புகார் செய்யப் போகிறேன் என்று சொல்லியுள்ளார். இதனை கேட்ட கார்த்திக் என்பவர் எங்களை பற்றி காவல்நிலையத்தில்  புகார் செய்தால் உங்களுக்கு தான் ஆபத்து நேரிடும், உங்கள் நிறுவனத்தை போலீசார் சீல் வைப்பார்கள் என்று மிரட்டியுள்ளார்.

அவர்களது மிரட்டலுக்கு அஞ்சாத ராமகிருஷ்ணன்,மஜாஜ் நிறுவனம் எல்லைக்குட்பட்ட தல்லாகுளம் காவல்நிலையத்தில் சென்று மூவர் மீதும் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் முதற்கட்டமாக போலி நிருபர் கார்த்திக் என்பவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான உசேன் மற்றும் ஹபிப் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்