அதிக விளைச்சலால் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி - வேதனையில் விவசாயிகள்

கருப்பு திராட்சை விளைச்சல் அதிகம் இருந்தும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

அதிக விளைச்சலால் கருப்பு பன்னீர் திராட்சை விலை வீழ்ச்சி - வேதனையில் விவசாயிகள்

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் கருப்பு திராட்சை விளைச்சல் அதிகம் இருந்தும், விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சின்னமனூர் ஓடைப்பட்டி,  கூடலூா், சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் கருப்பு பன்னீா் திராட்சை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சுருளி அருவி செல்லும் சாலையில், ஆண்டுக்கு மூன்று போகம் கருப்பு திராட்சை விளைவிக்கப்படுகிறது.

கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சைகள் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், 60 முதல் 80 ரூபாய் என்ற கணக்கில், மொத்த வியாபாரிகள் கொள்முதல் செய்தால்தான் நஷ்டம் நேராது என்ற நிலையில், உள்ளூர் வியாபாரிகள் 20 ரூபாய்க்கு மட்டுமே கேட்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்த விலை வீழ்ச்சிக்கு அதிக விளைச்சல் ஒரு காரணமாகவும், தொடர் மழை  மற்றொரு காரணமாகவும் கூறப்படுகிறது.