கிடாரம்பட்டியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...

புதுக்கோட்டை அருகே கிடாரம்பட்டியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற போவதாக தகவல் பரவியதையடுத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

கிடாரம்பட்டியில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்...

புதுக்கோட்டை மாவட்டம் கிடாரம் பட்டியில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பாக நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. இந்த நேரடி கொள்முதல் நிலையத்தில் கிடாரம்பட்டி கம்மங்காடு உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த  விவசாயிகள் பயன்பெற்று வந்தனர்.

மேலும் இங்கு  50 லட்சம் ரூபாய்  மதிப்பில் நெல் குடோன் கட்டுவதற்கு ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி செய்த  விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை  கிடாரம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தபோது கொள்முதல் செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் கடந்த 15 தினங்களாக 500 நெல் மூட்டைகளுக்கு மேல் கொள்முதல் செய்யப்படாமல் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் இந்த கொள்முதல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றப்போவதாக தகவல் பரவியது. இதனையடுத்து  தற்போது இயங்கி வரும் கொள்முதல் நிலையம் அனைத்து கிராமங்களுக்கும் மையப் பகுதியாக இருப்பதால் வேறு இடத்திற்கு கொள்முதல் நிலையத்தை மாற்ற கூடாது என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.