அத்தி வரதர் திருத்தேரோட்டம் ; தேரை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரம்!!

காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற அத்தி வரதர் கோயில் திருத்தேரை சுத்தம் செய்யும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

அத்தி வரதர் திருத்தேரோட்டம் ; தேரை சுத்தம் செய்யும் பணிகள் மும்முரம்!!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயிலில் புகழ்பெற்ற வைகாசி பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 19 ஆம் தேதி நிகழ இருப்பதை ஒட்டி, திருத்தேர் சுத்தம் செய்யப்படும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

சுமார் 73 அடி உயரமும்,அழகிய பல சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய 7 அடுக்கு நிலைகளை கொண்ட இத் திருத்தேரினை தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உற்சவம் நடைபெறுவதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.