தன் தரப்பு வாதத்தை கேட்டபிறகே உத்தரவு : ஓ.பி.எஸ். கேவியட் மனு தாக்கல் !!

22ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தன் தரப்பு வாதத்தை கேட்டபிறகே உத்தரவு : ஓ.பி.எஸ். கேவியட் மனு தாக்கல் !!

அதிமுக பொதுக்குழு

அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஈபிஎஸ் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவில், தனது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இபிஎஸ் மேல்முறையீடு

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். 

அதில், பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை புறக்கணித்து கட்சியின் செயல்பாட்டை தடுக்கும் வகையில் உள்ள தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அவர் கோரியுள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. 

தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீடு மனுவை பட்டியலிடும்படி, கூடுதல் மனுவை ஈபிஎஸ் தாக்கல் செய்திருந்தார். வரும் 22ஆம் தேதி எடப்பாடி பழனிசாமியின் அந்த கூடுதல் மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் கேவியட்

இதனிடையே, இந்த மேல்முறையீடு வழக்கில் தன் தரப்பு வாதத்தை கேட்ட பிறகே எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஓ.பி.எஸ். தரப்பில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வரும் 22ம் தேதி எடப்பாடி பழனிசாமியின் மனு ஏற்கப்படும்பட்சத்தில், அடுத்த ஓரிரு நாட்களில் அவரது பிரதான மேல்முறையீடு மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.