“தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.7,000 கோடி குறைத்தது சாதாரண சாதனை அல்ல” - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை 7 ஆயிரம் கோடி ரூபாய் குறைத்தது சாதாரண சாதனை அல்ல என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

“தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறையை ரூ.7,000 கோடி குறைத்தது சாதாரண சாதனை அல்ல” - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் உரை மீதான விவாதத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ. அக்ரி எஸ். எஸ்.கிருஷ்ணமூர்த்தி எழுப்பிய கடன் சுமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,  கடந்த ஆட்சியின் போது 5 புள்ளி 70 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடன் தொகையை 5 புள்ளி 63 லட்சம் கோடி ரூபாயாக, சுமார் 0 புள்ளி 8 சதவீதம் குறைத்ததென்பது சாதாரண சாதனை அல்ல எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.