தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை - ஆசிரியர்கள் மட்டும் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு!!

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இன்றுடன் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் நாளைமுதல் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை - ஆசிரியர்கள் மட்டும் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவு!!

தொடக்கப் பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் அனைவரும் வருகிற 20ம் தேதி வரை கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு மற்றும், 3-ம் பருவத் தேர்வு இன்றுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து நாளை முதல் வருகிற ஜூன் 12-ம் தேதி வரை மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளுக்காக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வரும் 20-ம் தேதி வரை பள்ளிகளுக்கு கட்டாயம் வருகை தர வேண்டும் எனவும், வெளிநாடு செல்ல முன் அனுமதி பெற்றவர்கள் விடுப்பு எடுத்துக்கொள்ள தடையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.