உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்கள் திடீரென கடலில் இறங்கி போராடியதால் பரபரப்பு...

சீர்காழி அருகே மடவாமேடு மீனவர் கிராமத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள்  திடீரென கடலில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்கள் திடீரென கடலில் இறங்கி போராடியதால் பரபரப்பு...

மயிலாடுதுறை மாவட்டம்  சீர்காழி தாலுகாவில் திருமுல்லைவாசல், பூம்புகார், மடவாமேடு உள்ளிட்ட  18 மீனவ கிராமங்களை சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட மீனவர்கள், சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக் கோரி நேற்றிலிருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் நாகப்பட்டினம் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குனர் ரெட்சல் மற்றும் உதவி இணை இயக்குனர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

இந்நிலையில் சீர்காழி  மடவாமேடு மீனவ கிராமத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீனவ பெண்கள்  கையில் கருப்புக்கொடி ஏந்தி திடீரென கடலில் இறங்கி போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.