அரசு மாநகர பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவ பெண்!!

மீன்கூடையுடன் பஸ்ஸில் ஏற்றிய மீனவப் பெண்மணியை இறக்கிவிட்ட நடத்துனர்.

அரசு மாநகர பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட மீனவ பெண்!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கொக்கிலிமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்லம்மாள் என்பவர் இன்று காலை மீன் வியாபாரத்திற்காக ரூபாய் 10 ஆயிரத்திற்கு மீனை ஏலம் எடுத்து அதனை மீன் கூடையில் வைத்து மகாபலிபுரம் பேருந்து நிலையத்தில் மகாபலிபுரத்தில் இருந்து தாம்பரம் வரை செல்லக்கூடிய  பேருந்தில் ஏறியுள்ளார். 

அப்பொழுது அப்பேருந்தின் நடத்துனர் மீன் கூடையை எடுத்துக்கொண்டு பேருந்தில் ஏறக்கூடாது என்று கூறி அப்பெண்மணியை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கி விட்டுள்ளார். இந்த பேருந்தில் இந்த நடத்துனர் பணியில் இருக்கும்போது மட்டுமே பேருந்தில் ஏற்ற மறுப்பதாகவும் அவதூறாக பேசுவதாகவும் தெரிவித்து உள்ளார். நடத்துனர் மேல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தாம்பரம் மாநகர பேருந்து பணிமனை மேலாளர் பாலசுந்தரம் அவரிடம் கேட்டதற்கு நான் விடுப்பில் இருப்பதாகவும் இந்த பேருந்தில் லக்கேஜ் ஏற்றலாம் எனவும், மேலும் சம்பவம் குறித்து உரி ய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.