தமிழகத்திலேயே முதன் முறையாக...! முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்........

தமிழகத்திலேயே முதன் முறையாக...!  முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ்........

தமிழகத்திலேயே முதன் முறையாக முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 250. 90 லட்சம் மதிப்பீட்டில் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலை திட்ட பணியை தமிழக பள்ளிக்  கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு சூரியூர் கரை சாலையில் இருந்து சேட்டிலைட் சிட்டி அண்ணா நகர் செல்லும் கரை சாலை பழுதடைந்து மிகவும் மோசமாக உள்ளது.  இதனால் இந்த சாலையில் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடைபெற்று வருவதாகவும்  அதனால் அந்த சாலையை புதுப்பித்து தர வேண்டுமென தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

 அதன் அடிப்படையில் தமிழகத்தில் முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டம் தொடங்கி உள்ளதாகவும் அந்த திட்டம் முதன்முதலாக திருவெறும்பூர் தொகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் 2022 மற்றும் 2023 ஆண்டு நிதியின் கீழ் ரூ 250.90 லட்சம் மதிப்பீட்டில் 3.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்டது.  அதன் அடிப்படையில் இன்று காலை தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த சாலை நபல்பட்டு சூரியூர் சாலையில் இருந்து  திருவெறும்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் (ஆர்டிஒ )வரை  5 மீட்டர் அகலத்திற்கும் அதன் பிறகு கும்பக்குடி வரை 3 மீட்டர் அகலத்திற்கும்  புதுப்பிக்கப்படுகிறது. இந்த விழாவில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கும்பக்குடி கங்காதரன், ஒன்றிய கவுன்சிலர் கயல்வழி, திமுக நிர்வாகிகள் ஜெகதீசன், சாந்தகுமார், மாரிமுத்து, உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,

திராவிட மாடல் அரசு இரண்டு ஆண்டுகள் நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும், தமிழகத்தில் முதல்வரின் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதன் முதல் திட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட இந்த பகுதியில் 3.8 கிலோமீட்டர் தூரத்திற்கு தொடங்கப்படுவதாகவும் அது தனக்கு பெருமை அளிப்பதாகவும் கூறினார். 

மேலும் அவர், " இந்த பகுதிக்கு வரும்பொழுது இந்த பகுதியில் உள்ளாட்சிப்  பிரதிநிதிகள், பொதுமக்கள் நான் சாலையில் வரும் பொழுது இந்த பகுதி சாலையில் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் வேலைக்கு செல்பவர்கள் போக முடியாமல் பெரும் சிரமத்திற்கு வருவதை நீங்களே பாருங்கள் எனக் கூறினார்கள். அதன் அடிப்படையில் தற்போது இந்த நிதி ஒதுக்கி பணி தொடங்கப்படுவதாகவும் மேலும் இதே போன்று நெடுஞ்சாலை பணிகள் 13 கோடி ரூபாய் மதிப்பில் சாலைகள் அமைக்கப்பட உள்ளது", என்றும் கூறினார். . 

மேலும் திமுக பொறுப்பு ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிந்து உள்ளது என்றும், அதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் ஆயிரத்து 222 இடங்களில் சாதனை விளக்க பட்ஜெட் விளக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது எனவும், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரிடம் இருந்து வரும் குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் தீர்த்து வைத்து வருவதாகவும் மேலும் வரும் ஆண்டுகளிலும் தங்களது ஆதரவு தேவை; நாங்கள் அனைத்தும் செய்து முடிக்கவில்லை;  செய்ய வேண்டியது நிறைய உள்ளது;  மூன்றாம் ஆண்டு உறுதிமொழி ஆண்டாக கால் பதிப்பதாகவும் கூறினார்.

அதனையடுத்து, திருவெறும்பூர் பகுதியில் பவர் ஸ்டேஷன் அமைப்பது குறித்து கேட்டதற்கு நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேருவோடு ஆலோசனை கூட்டம் நடந்ததாகவும் அப்பொழுது நமது பகுதிக்கு ஒரு பவர் ஸ்டேஷன் அமைத்து  தர வேண்டுமென நேருவிடம் கேட்டதாகவும் அதற்கு பவர் ஸ்டேஷன் அமைப்பதற்காக 22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக  கூறினார்.

மேலும் நவல்பட்டு பகுதியில் பவர் ஸ்டேஷன் அமைப்பதற்கு ஒரு ஏக்கர் இடம் பார்த்து ளதாகவும் கூறினார்கள் அதற்கு இடம் கூடுதலாக வேண்டும் என்றாலும் தருவதற்கு நாங்கள் தயார் என கூறியுள்ளதாகவும்,  வருங்காலங்களில் இது போன்ற பவர் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்காக 8 பிரீடர் கொண்ட பவர் ஸ்டேஷன் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். 

இதையும் படிக்க     }  நாளை வெளியாகிறது பிளஸ் 12 தேர்வு முடிவுகள்

தொடர்ந்து பேசிய அவர்,  பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வரவிருப்பதாகவும்,  மாணவ மாணவிகள் தேர்வு முடிவுகள் பற்றிய கவலைப்படாமல் தன்னம்பிக்கை உடன் செயல்பட வேண்டும் என்றும்,

Naan Mudhalvan | Students Speak | Engineering Courses | Cyber Security -  YouTube

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு உரிய துறைகளை தேர்வு செய்து படிக்க 'நான் முதல்வன்'  திட்டத்தை படித்து பார்த்து பயன்பெற வேண்டும் என்றும்  கூறினார்.

 இதையும் படிக்க     }