ஆவின் இனிப்பு வகைகளை வாங்கி வழங்குங்கள்... தலைமைச் செயலாளர் இறையன்பு வலியுறுத்தல்...

பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆவின் இனிப்பு வகைகளை வாங்கி வழங்குங்கள்

ஆவின் இனிப்பு வகைகளை வாங்கி வழங்குங்கள்... தலைமைச் செயலாளர் இறையன்பு வலியுறுத்தல்...

தீபாவளி பண்டிகையொட்டி, பணியாளர்களுக்கு ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்கும்படி அனைத்து துறை செயலாளர்களுக்கும் தலைமை செயலாளர் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக கடிதம் எழுதியுள்ள அவர், ஆவின் நிறுவனத்தில், தினமும் சராசரியாக 41 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். இவற்றுள் விற்பனை போக மீதமுள்ள பாலில் பால் உப பொருட்கள் தயார் செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.  

ஆண்டுதோறும் தீபாவளிக்காக சிறப்பு இனிப்பு வகைகளை ஆவின் விற்பனை செய்வதாகவும், அந்தவரிசையில் நடப்பாண்டு  காஜுகத்லி, நட்டி மில்க் கேக், மோத்தி பாக், காஜு பிஸ்தா ரோல் மற்றும் காபி பிளேவர்டு மில்க் பர்பி ஆகிய 5 வகை இனிப்புகள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார்.

எனவே பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆவின் இனிப்பு வகைகளை கொள்முதல் செய்து வழங்கவும், துறை சார்ந்த அலுவலக கூட்டங்களில் இனிப்பு வழங்குவதாக இருந்தால் ஆவின் இனிப்பு வகைகளையே கொள்முதல் செய்யவும் இறையன்பு அறிவுறுத்தியுள்ளார்.