திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாண படுத்திய வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

திமுக பிரமுகரை தாக்கி அரைநிர்வாண படுத்திய வழக்கு: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, ராயபுரம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையிலான அதிமுகவினர், அவரை தாக்கி அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான திமுக பிரமுகர் நரேஷ் அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தேர்தல் விதிகளை மீறியதாக ஜெயக்குமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், ஜெயக்குமார் தரப்பில் ஜாமீன் கோரி,  ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு மீதான விசாரணையின் போது, பொதுவெளியில் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால் ஜெயக்குமார் மீது ஐபிசி 506 ஆவது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு பிணை வழங்கக் கூடாது என அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போத குறுக்கிட்ட ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், பிணை கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே சாதாரண குற்றத்திற்கு கொலை முயற்சி வழக்கு போடப்பட்டிருப்பதாக வாதம் செய்தார்.