மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம்: 33 கோடி 3 லட்சம் மகளிர் பயன் - அமைச்சர் பேச்சு

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம்: 33 கோடி 3 லட்சம் மகளிர் பயன் - அமைச்சர் பேச்சு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை கோ.புதூர் பணிமனையில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார், மேலும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஒய்வுகால பலன்கள், மற்றும் விபத்து இல்லாமல் சிறப்பாக பணியாற்றிய ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Registration Of Deeds,பத்திரப் பதிவு கட்டணம் உயராது: அமைச்சர் அளித்த உறுதி!  - minister moorthy has said that the government has no intention of  increasing the amount for registration of deeds - Samayam Tamil

மேலும் படிக்க | ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு - காவல் ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜர்!!!!

வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில்:

மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம்

"கிராமப்புற வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1972 ஆம் ஆண்டு அரசு போக்குவரத்து கழகத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்தார், திமுக ஆட்சி காலத்தில் அதிக அரசு பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. திமுக ஆட்சி காலத்தில் பேருந்து வசதிகள் இல்லாத பகுதிக்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டு பேருந்துகள் விடப்பட்டன. மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டத்தில் இதுவரை 33 கோடியே 38 இலட்சம் மகளிர் பயனடைந்துள்ளனர்.

கட்டணமில்லா பேருந்து ரத்து.. கட்டணம் உயர்வு? அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும்  தமிழக அரசு! - News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil  News Live | News in Tamil | No.1 ...

கட்டணமில்லா பேருந்து - மகளிரின் பொருளாதார நிலை உயர்வு

கட்டணமில்லா பேருந்தில் சராசரியாக ஒரு நாளுக்கு 5 இலட்சத்து 56 ஆயிரம் மகளிர் பயனடைந்து வருகிறார்கள், மதுரைக்கு 251 மாசில்லா பேருந்துகள் மற்றும் 100 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டம், மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பழைய பேருந்துகளுக்கு பதிலாக புதிய பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்தால் மகளிரின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது" என பேசினார்.

Free bus travel for women; Government Important Notice Issue | பெண்கள் இலவச  பேருந்து பயணம்; அரசு முக்கிய அறிவிப்பு வெளியீடு | Tamil Nadu News in Tamil

மேலும் படிக்க | மாநகராட்சி மின் மயானங்களில் பொது மக்களிடம் கட்டணம் வசூலித்தால் தகுந்த நடவடிக்கை - மேயர் எச்சரிக்கை