ஒன்றரை ஆண்டில் 60% வாக்குறுதிகள் நிறைவேற்றம்  : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !!

ஒன்றரை ஆண்டில் 60% வாக்குறுதிகள் நிறைவேற்றம்  : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !!

கோவையில் முதலமைச்சர்

எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்து கைத்தட்டல் பெற தான் விரும்பவில்லை என்றும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாக பாராட்டுக்களைப் பெறவே விரும்பவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இணைந்த மாற்றுக்கட்சியினர்

கோவை மாவட்டம், பொள்ளாட்சி அருகே உள்ள ஆச்சிப்பட்டியில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பனப்பட்டி தினகரன்  உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 55 ஆயிரம் பேர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.

சொன்னதை செய்வோம்

விழாவில் பேசிய முதலமைச்சர், திமுக ஆட்சியமைத்த ஒன்றரை ஆண்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாகக் கூறினார். சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பது கலைஞரின் முழக்கம் என்று கூறிய முதலமைச்சர், சொல்லாததையும் செய்வோம், சொல்லாமலும் செய்வோம் என்பதுதான் தனது பாணி எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சித்து கைத்தட்டல் பெறவிரும்பவில்லை என்றும், தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதன் மூலமாக பாராட்டுகளை பெறவே தான் விரும்புவதாகவும் கூறினார். மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும்படியும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இவ்விழாவை தொடர்ந்து சாலை மார்க்கமாக பல்லடம் வழியே திருப்பூர் சென்ற முதலமைச்சருக்கு, வடுகம்பாளையம் பகுதியில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் பெருந்திரளான தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.