சுற்றுலாப் பயணிகள் வீசப்படும் குப்பைகளால் - மாசடையும் கூக்கால் ஏரி!

தமிழகத்தின் நன்னீர் ஏரிகளின் ஒன்றான கொடைக்கானல் கூக்கால் ஏரி, சுற்றுலாப் பயணிகளால் தூக்கி வீசப்படும் குப்பைகள்  மற்றும் மது பாட்டில்களால் மாசடைந்து வருகிறது.

சுற்றுலாப் பயணிகள் வீசப்படும் குப்பைகளால் - மாசடையும் கூக்கால் ஏரி!

கொடைக்கானல் மலைப்பகுதியில், கூக்கால் மற்றும் பேரிஜம் ஆகியவை நன்னீர் ஏரிகளாக உள்ளன. இதில் வனத்துறை அனுமதி பெற்றால் மட்டுமே பேரிஜம் ஏரிக்குச் செல்ல முடியும் என்பதால் இன்று வரை பாதுகாப்பான சூழலில் உள்ளது.

ஆனால் கூக்கால் ஏரியானது  கூக்கால் கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ளதால், அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், அந்த ஏரியில், மது பாட்டில்கள் மற்றும் நெகிழி குப்பைகளை வீசிச் செல்வதால் ஏரி மாசுபட்டு வருகிறது.

கூக்கால் ஊராட்சி நிர்வாகம், மற்றும் வட்டார வளர்ச்சித்துறை இணைந்து, கூக்கால் ஏரி மாசடையாமல் பாதுகாக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.