அக்டோபர் மாத இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்…  

அக்டோபர் மாதம் இறுதிக்குள் தமிழகத்தில் 6 கோடி நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.  

அக்டோபர் மாத இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்துங்கள்…   

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் மெகா தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தபின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி கையிருபிற்கு ஏற்றவாறு இன்றைய கொரோனா மெகா தடுப்பூசி முகாம்களின் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாம் மூலம் 28 லட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் இன்று 15 லட்சம் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யபட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி உள்ளதாக தெரிவித்த அவர் அரசு மற்றும் தனியார் மூலம் இதுவரை 4.2 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும், அதில் 3 கோடி நபர்களுக்கு மேல் முதல் தவணை மட்டும் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 1.1 சதவீதமாக உள்ளது என்று தெரிவித்த அவர் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி அக்டோபர் மாதம் இறுதிக்குள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டால் மூன்றாம் அலை ஏற்படாமல் தடுக்கலாம் என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர் அரசு நடவடிக்கைகள் மூலம் மட்டும் கொரோனா நோயினை ஒழிக்க முடியாது என்று தெரிவித்தார்.