இறை பசியோடு வருபவர்களுக்கு பசியாற்றப்படும்- அமைச்சர் சேகர்பாபு!  

இறை பசியோடு வருபவர்களுக்கு ஆண்டவனும், வயிறு பசியோடு வருபவர்களுக்கு முதல்வரும் பசியாற்றுவார்கள் எனவும், அனைத்து கோயில்களிலும் தரமான அண்ணதானம் வழங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.  

இறை பசியோடு வருபவர்களுக்கு பசியாற்றப்படும்- அமைச்சர் சேகர்பாபு!   

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த 4ம் தேதி நடைபெற்ற இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறைக்கான மானிய கோரிக்கையின் பொழுது பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதில் 10 அரசு மற்றும் கலை பண்பாட்டுக் கல்லூரிகள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, கல்லூரி துவங்குவதற்கான நடவடிக்கைகள், கட்டமைப்புகள், தரம் வாய்ந்த வகையில் துவங்க உணவுத்துறை அமைச்சர் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கல்வி குழும முதல்வர்கள், துறை செயலர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோஞனை நடைபெற்றது எனவும், இந்தாண்டு 5 கல்லூரிகள் துவக்குவதாகவும், அடுத்தாண்டு 5 கல்லூரிகள் துவக்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.

இந்த பணிகள் 4 கால் பாய்ச்சலில் இல்லாமல் 8 கால் பாய்ச்சலில் நடைபெறுகிறது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கொரோனா 3ம் அலை தொடர்ந்நு அச்சுறுத்தி வருகிறது. இதனால், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் கோயில்கள் திறப்பதில் சாத்தியமில்லை. கொரோனா முழுவதுமாக குறையும் பொழுது அனைத்தும் செயல்பட முதல்வர் உத்தரவிடுவார். மற்ற நாட்களில் கோயில்கள் திறந்து தான் உள்ளது. அன்றைய தினங்களில் வழிபடலாம் என கூறிய ததோடு, கோவில்களில் திருக்குறள் கற்பிப்பது குறித்து அந்தந்த மதத்தினர் அந்தந்த முறைகளில் வழிபாடு செய்வதில் எந்த தடையும் இல்லை.

கோயில்களுக்கு இறை பசியோடு வருபவர்களுக்கு ஆண்டவனும், வயிறு பசியோடு வருபவர்களுக்கு முதல்வரும் பசியாற்றுவார்கள். இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஊதிய நிலுவை என்பது இல்லவே இல்லை எனவும், உரிய நேரத்தில் அவர்களுக்கான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், தேர்தல் அறிக்கையில் அறிவிக்காத நிலையிலும், கோயில்களில் மொட்டைக்கு கட்டணம் இல்லை என அறிவித்ததோடு, 1,749 பேர் இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வறுமையை கருத்தில் கொண்டு மாதம் 5 ஆயிரம் ஊதியம் வழங்குவதாகவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் தெரிவித்தார்.