குறைந்தது தங்கம் விலை! குஷியில் இல்லத்தரசிகள்!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் ரூ.36,240க்கு விற்பனையாகிறது.

குறைந்தது தங்கம் விலை! குஷியில் இல்லத்தரசிகள்!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 14 ரூபாய் குறைந்துள்ள நிலையில், ஒரு சவரன் ரூ.36,240க்கு விற்பனையாகிறது.

சென்னையில் கடந்த இரண்டு வாரங்களாக தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வருகிறது. கடந்த 17ம் தேதியில் இருந்து தங்கம் விலையில் பெரிதாக மாற்றங்கள் இருக்கவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. அதாவது, சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.36,528க்கு விற்பனையானது. மாலையில் தங்கம் விலை சரிந்து ரூ.36,352க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் சரிந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.4,530க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.112 குறைந்து ரூ.36,240க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.71.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.71,500க்கும் விற்பனையாகிறது.