சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் சரிவு... இன்றைய விலை?

பங்குச்சந்தை இன்று ஏற்றம் கண்டதால், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் சரிவு... இன்றைய விலை?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நேற்று ஆசிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதன் தாக்கம் மும்பை பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. 

அதன்படி, இன்று மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்சக்ஸ் 1,333 புள்ளிகள் வரை அதிகரித்து, 55 ஆயிரத்து 681 ஆக நிலை கொண்டு வர்த்தகமானது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டியும் 352 புள்ளிகள் உயர்ந்து, 16 ஆயிரத்து 600 ஆக நிலைகொண்டது.

இந்நிலையில், பங்குச்சந்தை இன்று ஏற்றம் கண்டதால், சென்னையில் ஆபரண தங்கத்தின் விலையில் சரிவு காணப்பட்டது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, சவரன் 38 ஆயிரத்து 408-க்கு விற்பனையானது. இதேபோல்  வெள்ளியின் விலை கிலோவுக்கு 2 ஆயிரத்து 700 குறைந்து கிலோ 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.