குட் நியூஸ்.. சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பொது நகைக்கடன் தள்ளுபடி.. அதுவும் இந்த மாதத்திற்குள்? ஒரு எச்சரிக்கை!!

வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தமிழகத்திலுள்ள 14 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பொதுநகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

குட் நியூஸ்.. சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் பொது நகைக்கடன் தள்ளுபடி.. அதுவும் இந்த மாதத்திற்குள்? ஒரு எச்சரிக்கை!!

சென்னை சைதாபேட்டையில் நிகழ்ச்சி ஒன்றில்  கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் இதனை கூறினார்.

தி.மு.க அரசின் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல், நகைகடன் தள்ளுபடி அறிவித்து, அதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பித்தால் அவர்களுக்கும் நகைகடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார். மேலும் சட்டத்தை மீறி முறைகேடாக, போலியான ஆவணம் மற்றும் நகைகள் கொண்டு நகைகடன் பெற்றவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி எச்சரித்தார்.

முன்னதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகைகளை திரும்ப வழங்கினர்.