அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm...!!

அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm...!!

தமிழ்நாட்டில் மே மாதம் இறுதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யப்பட இருப்பதாக கூட்டுறவுத்துறை அறிவிப்பு. 

தமிழ்நாட்டில் முதன்முறையாக காஞ்சிபுரத்தில் உள்ள 683 நியாய விலைக்கடைகளிலும் QR Code மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை, சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தூத்துக்குடி உள்ளிட்ட 12  மாவட்டங்களில் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்திற்குள் அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளிலும் UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என கூட்டுறவு துறை தெரிவித்துள்ளது. எனவே வரும் 31 ஆம் தேதிக்குள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் Google Pay, Paytm, UPI வசதி செய்து கொடுக்க அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிக்க:‘தி கேரளா ஸ்டோரி’ வங்கத்தில் தடை...! அதிரடி காட்டுமா தமிழ்நாடு. கேரளா...!!