ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் செஞ்சி மஸ்தான்...

ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்காக தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கீடு- அமைச்சர் செஞ்சி மஸ்தான்...

ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார். 

சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு தமிழகத்திலிருந்து ஆயிரத்து 500 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும், பயணம் மேற்கொள்வதற்கான உணவு, இருப்பிடம் ஆகிய செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் உலமாக்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்கள் அனைவருக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட இருப்பதாகவும்,  ஓய்வு பெற்ற உலமாக்கள் 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.