தமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவு...

தமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் 39 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு  அதிரடி உத்தரவு...

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மனித உரிமை ஆணைய செயலாளராக டாக்டர் விஜயகார்த்திகேயனும், பதிவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த பி.சங்கர் ஐ.ஏ.எஸ் காதி கைவினைப் பொருள் ஆணைய சி.இ.ஓ.வாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல், நாமக்கல் ஆட்சியராக பணியாற்றிய மேக்ராஜ் நகராட்சி நிர்வாகத்துறை இணைச் செயலாளராகவும்., தமிழ்நாடு கோ-ஆப்-டெக்ஸ் மேலாண்மை இயக்குநராக டி.பி.ராஜேஷ் ஐ.ஏ.எஸும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

பேரூராட்சிகள் இயக்குனராக பணியாற்றி எஸ்.பழனிசாமி ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை இணைச் செயலாளராகவும்., கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்த மலர்விழி அறிவியல் நகர துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதைதொடர்ந்து குடிநீர் வாரிய மேலாண் இயக்குனர் டி.என்.ஹரிஹரன், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு  சங்கத்தின் திட்ட இயக்குநராகவும்,  நிதித்துறை இணைச் செயலாளராக அருண் சுந்தர் தயாளனையும் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள பட்டுப்புழு வளர்ச்சித்துறை இயக்குநராக கே.சாந்தியும், அருங்காட்சியகங்களின் இயக்குனராக எஸ்.ஏ. ராமன் ஐ.ஏ.எஸும்., தமிழ்நாடு மேக்னசைட் நிறுவன மேலாண் இயக்குனராக சி.கதிரவன் ஐ.ஏ.எஸும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் மேலாண் இயக்குநராக அனில் மேஷ்ராமும்., தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி நிறுவன மேலாண் இயக்குநராக விவேகானந்தனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு ஆவணக்காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையராக ஹர் சகாய் மீனா நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பொதுத்துறை துணைச் செயலாளராக எம்.பிரதீப்குமார் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் மாநகராட்சி மத்திய பகுதியின் வட்டார துணை ஆணையராக சரண்யா அரியும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன மேலாண் இயக்குநராக சி.என்.மகேஷ்வரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு உப்பு நிறுவன மேலாண் இயக்குநராக கே.ராஜாமணியும்., தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக கிறிஸ்துராஜ் ஐ.ஏ.எஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு நிறுவன மேலாண் இயக்குநராக ஆர்.நந்தகோபால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநராக தீபக் ஜேக்கப்பும் நியமிக்கப்பட்டுள்ளார்.