தமிழ்நாட்டில் நல்லாசிரியர் விருது பெற்றவர் யார்..? அவர் கூறியது என்ன..?

தமிழ்நாட்டில் நல்லாசிரியர் விருது பெற்றவர் யார்..? அவர் கூறியது என்ன..?

”அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் இல்லை பெருமையின் அடையாளம்" என டெல்லியில் நல்லாசிரியர் விருதை பெற்ற  ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நல்லாசிரியர் விருது:

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மத்திய கல்வி அமைச்சகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட 46 ஆசிரியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு டெல்லியில் நல்லாசிரியர் விருதை வழங்கி கௌரவித்தார். அத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 50,000 ரூபாய் ரொக்கமும், நல்லாசிரியருக்கான பதக்கமும் வழங்கப்பட்டது. இதில்

                    1. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் அரசு பள்ளியின் ஆசிரியர்                            ராமச்சந்திரனுக்கு குடியரசு தலைவர் நல்லாசிரியர் விருது வழங்கி                                              கௌரவித்தார்.

                    2. இதே போல் புதுச்சேரி மாநிலத்தின் முதலியார் பேட்டையில் உள்ள அர்ச்சுனா                          சௌப்ராய நாயக்கர் அரசு மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் அரவிந்தராஜா-                          வுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 

விருதுபெற்ற ஆசிரியர்களின் உரை:

1.  விருதைப் பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் ராமச்சந்திரன்,  உயரிய விருதை ஒரு ஆசிரியராக பெற்றதில் மிக்க மகிழ்ச்சி என்று கூறினார். தமிழக அரசுக்கும் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், பள்ளியின் சக ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். 

இதையும் படிக்க: சசிகலாவின் ”ஒற்றுமை”...எஸ்கேப் ஆன முன்னாள் அமைச்சர்...செய்தியாளர்களிடம் கூறிய 3 வார்த்தை...!

மேலும், அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் கிடையாது எனவும் பெருமையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தனக்கு  வழங்கிய 50 ஆயிரம் ரூபாய் தொகையை போதை பொருள் விழிப்புணர்வு திட்டத்தை ஏற்படுத்த பயன்படுத்த போவதாக கூறினார். 


2.  தொடர்ந்து  பேசிய புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஆசிரியர் அரவிந்தராஜா, தனக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருப்பதற்கு தனது சக ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் புதுச்சேரி மாநில அரசுக்கும்  நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். இத்தகைய விருது மேலும் ஊக்கம் அளிப்பதாகவும் தனக்கான பணியை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.