ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் - தமிழ் நாட்டின் வளர்ச்சி தான் பாமகவின் இலக்கு

மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு  ஆளுநர் ஒப்புதல் அளிக்கவேண்டும் -  தமிழ் நாட்டின் வளர்ச்சி தான் பாமகவின் இலக்கு

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க கூடாது என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் பாமக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

மேலும் படிக்க | பொங்கல் தொகுப்பு விவகாரத்தில் - அமைச்சர் பதில்

பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகேயுள்ள விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், தலைவர் அன்புமணி இராமதாஸ், கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

அன்புமணி ராமதாஸ் பேச்சு

பாமக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. 

ஆட்சிஅதிகாரித்தில் இல்லாவிட்டாலும் மக்கள் நலனுக்காக பாமக பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. 

மேலும் படிக்க| நல்லது செய்ய முயன்றவர் அரிவாள் வெட்டுடன் மருத்துவமனையில் அனுமதி

ராமதாஸ் ஐயாவின் கோரிக்கை அனைத்தையும் திமுக அரசு நிறைவேற்றி வருகிறது. 

2023-ம்ஆண்டுக்கான செயல்திட்டங்களுக்கு ஐயா வழிவகுப்பார். செயல்திட்டங்களை அனைத்தையும் செய்துமுடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. 

பிரசாந்த்கிஷோர் பல மாநிலங்களில் ஆட்சி அமைய வழிவகுத்துள்ளார். அதேபோல் புதுச்சேரியில் அவர் ஆய்வு நடத்தியபோது அதிக   இளைஞர்கள் கொண்டகட்சியாக பாமக  உள்ளதாக தெரிய வந்துள்ளது

இளைஞர்களால் தான் பாமக வேகமாக வளர்ந்து வருகிறது. ஆட்சிக்குவரவில்லை, ஆட்சிஅதிகாரத்திற்கு வரவில்லை ஆனால் ஐயா தலைமையில் மக்களுக்காக பல சாதனைகளை நிகழத்தியுள்ளோம். 

வளர்ச்சி அரசியலை நோக்கி தான் பாமக பயணிக்கிறது, தமிழ்நாட்டின்வளர்ச்சிதான் பாமகவின் இலக்கு.