பச்சாபாளையத்துக்கு பஸ்ஸை விடுப்பா : போகாத ஊருக்கு போக சொல்லி அடம்பிடித்த பாட்டி !!

கோவையில் மூதாட்டி ஒருவர் பணிமனைக்கு செல்ல இருந்த அரசு நகரப் பேருந்தில் ஏறி தான் செல்லும் ஊருக்கு பேருந்தை இயக்குமாறு கேட்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

பச்சாபாளையத்துக்கு பஸ்ஸை விடுப்பா : போகாத ஊருக்கு போக சொல்லி அடம்பிடித்த பாட்டி !!

கோவை காந்திபுரம் நகரப் பேருந்தில் இருந்து தினசரி  ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காந்திபுரம் முதல் மதுக்கரை வழியாக பாலத்துரை வரை செல்லும்  வழித்தடம் எண் 50  கொண்ட அரசு பேருந்து ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு  பயணிகளை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்ட பிறகு பணிமனைக்கு செல்ல இருந்தபோது ஒரு வயதான பெண்மணி பேருந்தில் ஏறி மாற்று வழித்தடமான பச்சா பாளையத்திற்கு சென்று தன்னை இறக்கி விட வேண்டும் என வற்புறுத்தி உள்ளார்.

ஆனால் நடத்துநரோ இந்த வாகனம் செட்டுக்கு செல்கிறது என பலமுறை கூறியும் அந்த வயதான பெண்மணி இறங்க மறுத்துள்ளார். மேலும் அந்தப் பெண்மணி  பேருந்தை  மேக்க விடு எனவும் நடத்துனரிடம் இந்த பேருந்து அவ்வழியே செல்லாது என எழுதிக் கொடு எனவும் கேட்டுள்ளார்.

ஆனால் நடத்துநர் பத்து நிமிடத்திற்கும் மேலாக பல்வேறு வகையில் அந்த மூதாட்டியிடம் கெஞ்சியும் அந்த மூதாட்டி இறங்காமல் அடம் பிடித்து வந்துள்ளார். தற்போது மூதாட்டியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.