பத்திரிக்கையாளர்கள் ஊடக வேசிகள் என எச்.ராஜா விமர்சனம்- ஊடகவியலாளர்கள் கொந்தளிப்பு

பத்திரிகையாளர்களைத் தொடர்ந்து அநாகரிமாகப் பேசி வரும் பாஜக பிரமுகர் எச்.ராஜாவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்  தெரிவித்துள்ளது.

சென்னையில்  நேற்று நடந்த  செய்தியாளர்கள் சந்திப்பின் போது  நிதானம் தவறிய  பாஜக மூத்த தலைவர் எச் ராஜா,பத்திரிக்கையாளர்களை ஊடக வேசிகள் எனத் தரம் தாழ்ந்து விமர்சித்தார். எச். ராஜாவின் இந்த பேச்சு ஒட்டு மொத்த ஊடகவியலாளர்களிடையே கடும் கொந்தளிப்பை  ஏற்படுத்தி  இருக்கிறது.

எச்.ராஜாவின் இந்த அநாகரிகப் பேச்சுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்.ராஜாவின் இதுபோன்ற பேச்சுகளை பாஜக தலைமை கண்டுகொள்ளாமல் இருப்பது, வேதனை அளிப்பதாகவும், தொடர்ந்து பொதுவெளியில் இத்தகைய ஆபாச விமர்சனங்களைச் செய்துவரும் எச்.ராஜா மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளது. .

எச்.ராஜா மட்டுமல்ல வேறு சிலரும் , செய்தியாளர்கள் மற்றும் ஊடகத்துறையினர் மீது அவதூறு , நேர்மையற்ற விமர்சனங்கள், அநாகரிகச் சொற்களைப் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துள்ளதாகவும், இது கண்டிக்க மட்டுமல்ல தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் சென்னை பத்திரிக்கையாளர்கள் மன்றம் வலியுறுத்தி கேட்டு கொண்டுள்ளது.