புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 28 - அலை மோதிய மக்கள் கூட்டம்..!

புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 28 - அலை மோதிய மக்கள் கூட்டம்..!

சென்னையில் 46 வது சர்வதேச  புத்தகக் கண்காட்சி தொடங்கப்பட்ட முதல் நாளில் அனைத்து அரங்குகளிலும் பார்வையாளர்கள்  கூட்டம் அலை மோதியது. 

46 ஆவது புத்தகக் கண்காட்சி:

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சார்பில் நடத்தப்படும் 46 ஆவது புத்தகக் காட்சி நேற்று (06.01.2023) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்கியது.ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கிய புத்தகக் கண்காட்சி வரும் 22 ஆம் தேதி வரை சுமார் 17 நாட்கள் நடைபெறவுள்ளது. புத்தகக் கண்காட்சி நடைபெறும் 17 நாட்களும் காலை 11 முதல் இரவு 8.30 வரை புத்தக விற்பனை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் புத்தகக் காட்சியில் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் என்று பபாசி தெரிவித்துள்ளது. மேலும், நுழைவு கட்டணமாக ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

1000 அரங்குகளில் பல லட்சம் புத்தகங்கள் - சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

இதையும் படிக்க: மார்கழி சிறப்பு - திருப்பாவை பாசுரம் 23 விளக்கம்..!

மக்கள் கூட்டம்:

கண்காட்சியில் பிரமாண்டமான அரங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை காணவும், வாங்கவும் முதல் நாளில் மக்கள் ஆர்வத்துடன் வந்தனர். கலை, இலக்கியம், மருத்துவம், தொழில்நுட்பம் என கண்ணுக்கு தென்படும் இடங்களில் எல்லாம் புத்தகங்களாக காட்சி அளிக்கின்றன. ஆயிரத்துக்கு மேறபட்ட அரங்குகளில் இளைஞர்கள், முதியவர்கள் என பல்வேறு தரப்பினர் விரும்பி படிக்கும் புத்தகங்கள் அணிவகுக்கின்றன. பதிப்பக நிறுவனங்கள் மற்றும் விருது பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை தேடி சென்று வாங்கி செல்வதை புத்தக கண்காட்சியில் காண முடிந்தது. மொழி பெயர்ப்புகள் கொண்ட புத்தகங்களும் கண்காட்சியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Chief Minister Mk Stalin Inaugurated By Chennai Book Fair 2023 Today | Chennai  Book Fair 2023: புத்தகப் பிரியர்களுக்கு காத்திருக்கும் விருந்து...  சென்னையில் புத்தக கண்காட்சி ...

அரங்கு எண் 28:

இந்த புத்தகக் கண்காட்சியில் சிறுவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அரங்குகள் அமைக்கபட்டுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சியில் குறிப்பாக அரங்கு எண் 28 இல் திருநங்கை எழுத்தாளர்களின் புத்தகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. 

சென்னை புத்தகக் கண்காட்சி இன்னும் 16 நாட்கள்  வாசக பிரியர்களு பல விருந்துகளை அளிக்க உள்ளது. வாசகர் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரும் உற்சாகத்துடன் பங்கேற்க கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யபட்டுள்ளன.