சென்னையில் நடைபெற்று வரும் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சியின் அரங்குகள் மற்றும் சிறப்பம்சங்கள்..!

சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா எனும் பெயரில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 7 நாள் கண்காட்சியை இந்து சமய அறநிலையங்கள் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

சென்னையில் நடைபெற்று வரும் சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கண்காட்சியின் அரங்குகள் மற்றும் சிறப்பம்சங்கள்..!

கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, பள்ளிக் கல்வித்துறை, இல்லம் தேடி கல்வி குறித்த விழிப்புணர்வு மையம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆவின், தாட்கோ, சென்னை மாநகராட்சி நகர்ப்புற வீடற்றோர் காப்பகம்  சார்பில் 15-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறை சார்பில் நடைபெறும் கண்காட்சியில் அந்தத் துறையை விளக்கும் வகையில் பொதுமக்கள் பார்வைக்காக ஏழு நாட்கள் இந்த கண்காட்சி வைக்கப்பட்டுள்ளது. 

சென்னை  மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 55 நகர்ப்புற வீடற்றோர் காப்பகம் உள்ளது. அந்த மையங்களில் சாலைகளில் வீடு இல்லமால் சுற்றி திரிபவர்களை கண்டறிந்து, அவர்கள் காப்பகத்திற்கு அழைத்து வரப்பட்டு சுய தொழில் கற்று கொடுத்து அவர்கள் செய்த பொருட்களும் இந்த கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்காட்சியின் மூலம் பொதுமக்களுக்கு தமிழக அரசின் துறை சார்ந்த விழிப்புணர்வு கிடைக்கும் என்பதால் பொதுமக்களும் பள்ளி மாணவ, மாணவிகளும் நேரில் வந்து பார்வையிட்டு பயன்பெற வேண்டுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.