தடை விதிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு...தடையை நீக்க முடியாது...!

தடை விதிக்கும் அதிகாரம் அரசுக்கு உண்டு...தடையை நீக்க முடியாது...!

ஹான்ஸ் பொருளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

ஹான்ஸ் என்பது மென்று திண்ணும் வகையிலான் உணவுப் பொருள் தான் என்றும், ஹான்ஸ் விற்பனைக்கு உரிய வரி செலுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டு ஹான்ஸ் பொருளை பறிமுதல் செய்து அழித்து வரும் உணவுப் பாதுகாப்பு துறையின் செயலுக்கு தடை விதிக்கக் கோரி ஏ ஆர் பச்சாவட் என்ற வணிக நிறுவனம் மனு தாக்கல் செய்தது. 

இதையும் படிக்க : ”ராஜா மந்திரியாக முடியாது” விமர்சனத்தை உடைத்தெறிந்து ”மந்திரியானார் டி. ஆர்.பி.ராஜா”

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம், எந்தவொரு புகையிலை தயாரிப்பும் பொது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கண்டறியப்பட்டால் அதற்கு தடை விதிக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளதாகவும்,  ஹான்ஸ் பொருளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது எனவும் தீர்ப்பு வழங்கி வழக்கை முடித்து வைத்தார்.