கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே படங்களில் நடிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் முடக்கியதே திமுக அரசின் சாதனை

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே படங்களில் நடிக்கிறார் - எடப்பாடி பழனிசாமி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 

எதிர்கட்சி தலைவரும் அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம் குண்ட்டத்தில் ஞாயிற்றுகிழமை மாலை நடைபெற்றது. 

எடப்பாடி பேசியதாவது திமுகவில் கட்சிக்கு உழைப்பவர்களுக்கு பதவி கிடைக்காது அதிமுகவில் வெளியேற்றப்பட்டவர்களுக்கே பதவி வழங்குகின்றனர் அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை முடக்கியது தான் திமுகவின் அரசின் சாதனை.

அதிமுக ஆட்சியின்  திட்டங்களை முடக்கியது  திமுக

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட விலையில்ல கறவை மாடு ஆடு கோழிகள் வழங்கும் திட்டத்தை நிறுத்தியுல்ளனர். உழைக்கும் திறனற்ற 5 லட்சம் மக்களுக்கு அதிமுக ஆட்சியில் முதியோர் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அதில் பெருமளவை நிறுத்திவிட்டனர்.

மேலும் படிக்க :தெலுங்கனா முதலமைச்சர் மகளிடம் 10 மணி நேரம் விசாரணை

அதேபோல் தாலிக்கு தங்கம், பெண்கலுக்கு இருசக்கர வாகனம் இலவச மடிக்கணினி திட்டம் அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களை ஒவ்வொன்றாக ரத்து செய்து வருகின்றனர்.அத்திகடவு அவிநாசி திட்டம் தற்போது ஆமை வேகத்தில் நடந்துவருகிறது.

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே

கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே உதயநிதி படங்களில் நடிக்கிறார். முதலமைச்சர் இன்னும் கொஞ்ச நாட்களில் அவருக்கும் எம்.பி பதவி வழங்கப்படும்.