12 மணி வரையிலான தலைப்புச் செய்திகள் !!

இன்று நண்பகல் 12 மணி வரையிலான தலைப்புச் செய்திகள்

12 மணி வரையிலான தலைப்புச் செய்திகள் !!

• அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான அவசர வழக்காக விசாரிக்க இபிஎஸ் கோரிக்கை

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்க தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

• இமாச்சல பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு  ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர்

இமாசலப்பிரதேசத்தில், பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

• மதுரையில் சுங்கச்சாவடியை அகற்ற கோரி அதிமுகவினர்  போராட்டம்

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

• இந்திய வரலாறு தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்திய வரலாறு இனி தமிழ்நாட்டில் இருந்து எழுதப்பட வேண்டும் என்று வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

• மத்தியப்பிரதேசத்தில்  பழங்குடியின பெண்ணுக்கு தீ வைத்த கும்பல் 

மத்தியப்பிரதேசத்தில், நில அபகரிப்பை தட்டிக் கேட்டதால் பழங்குடியின பெண்ணுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முதல் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விண்ணப்பம்

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இன்று முதல் ஜூலை 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

எரிபொருள் தட்டுப்பாட்டால் இலங்கையில் இந்த வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்றம் 3 நாட்கள் மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

• நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு விநியோக குழாய் வழி மூடல் என அறிவிப்பு - ரஷ்யா

நார்ட் ஸ்ட்ரீம் (Nord Stream)  1  எரிவாயு விநியோக குழாய் வழியை தற்காலிகமாக மூடப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது ஐரோப்பிய ஒன்றியத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மகாராஷ்டிராவில் ஆட்சியை கைப்பற்றியது ஷிண்டே அரசு

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 164 வாக்குகளை பெற்று ஷிண்டே அரசு ஆட்சியை கைப்பற்றியது. 

• முதலமைச்சர் தலைமையில் முதலீட்டாளர்கள் மாநாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 ஒப்பந்தங்கள் மூலம் 74 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.