மீண்டும் குருதி சார் ஆய்வு நடத்த சுகாதாரத் துறை திட்டம்...

தமிழகத்தில் மூன்றாவது கட்ட SERO சர்வே முடிவுகள் அண்மையில் வெளியாகிய நிலையில்  நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கண்டறியப்பட்ட மற்றும் குறைவாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் குருதி சார் ஆய்வு நடத்த சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

மீண்டும் குருதி சார் ஆய்வு நடத்த சுகாதாரத் துறை திட்டம்...

தமிழகத்தில் கொரொனா பாதித்த நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிவதற்காக  3 ஆம் குருதி சார் ஆய்வு ( SERO சர்வே ) தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநியோகம் தலைமையில் அன்மையில் நடத்தப்பட்டது இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரொனா தொற்று அதிகம் பாதித்த இடங்களான 888 இடங்களில் 26,610 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த ஆய்வின் முடிவில் 17,624  பேர் அதாவது 62.2 % பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது கண்டறியபட்டது. 

அதில்  அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 84 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருந்தது கண்டறியப்பட்டது தொடர்ந்து சென்னை , மதுரை , தென்காசி , தேனி ஆகிய 5 மாவட்டங்களில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டிருந்தது. குறைந்தபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 37 சதவீதம் பேருக்கும் தொடர்ச்சியாக கோவை திருப்பூர் நாகை நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும்  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உருவாகி இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரியவந்தது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக கண்டறியப்பட்ட பகுதிகளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வண்ணம் கூடுதல் தடுப்பூசி போடும் பணிகள் சுகாதாரத் துறையால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கண்டறியப்பட்ட மற்றும் குறைவாக கண்டறியப்பட்ட 5 மாவட்டங்களை தேர்வு செய்து மீண்டும் குருதி சார் ஆய்வை மேற்கொள்ள சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது.

முன்னதாக முதல் ஆய்வு கடந்தாண்டு ஆகஸ்ட்  மாதத்தில் நடத்தப்பட்டது குதில்  தமிழகத்தில்  31% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பர் முதல் மார்ச் வரை நடத்தபட்ட இரண்டாவது கட்ட  ஆய்வில்   நோய் எதிர்ப்பு சக்தி 31% லிருந்து 23% ஆக குறைந்தது தெரியவந்த நிலையில் தடுப்பூசி பயன்பாடு அதிகரிப்பால் மூன்றாவது ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி  62.2 சதவீதமாக  அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.