ஆலந்தூர்,மீனம்பாக்கம் பகுதிகளில்  கனமழை :  சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் !!

சென்னை பல்லாவரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சுமார் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய கனமழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

ஆலந்தூர்,மீனம்பாக்கம் பகுதிகளில்  கனமழை :  சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர் !!

சென்னை ஆலந்தூர், மீனம்பாக்கம் விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை தாம்பரம் சேலையூர், வண்டலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்தது.சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.  வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதேபோல்  புறநகர் பகுதியான  சிட்லபாக்கத்தில் திடீர் மழை எதிரொலியால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வெளியேறியது.. இதனால்  வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளான நிலையில் மழைநீருடன் கழிவுநீர் வெளியேறி வீடுகளுக்குள் புகுந்ததால் பெரும் துர்நாற்றமும் வீசியது.

சிட்லபாக்கம் பகுதி முழுவதும் மழைநீர் கால்வாய்கள் தோண்டப்பட்ட நிலையில் கழிவு நீரும் மழை நீரும் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால்  மக்கள் அவதிக்கு  ஆளாகி உள்ளனர். தாம்பரம் மாநகராட்சி இதற்கு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.