தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டென்று பெய்ய போகிறதாம்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

கனமழை எச்சரிக்கையால் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

தமிழகத்தில் மழை கொட்டோ கொட்டென்று பெய்ய போகிறதாம்.. 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாலையில் கரைபுரண்டு ஓடும் மழைநீர்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இரண்டு மணி நேரம் விடாமல் பெய்த மழையால், சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கோவை மாவட்டம் வால்பாறையிலும் மிதமான மழை பெய்தது. தொடர்ந்து அங்கு மழை பெய்து வருவதால், கூலங்கள் ஆறு, வாழைதோட்ட ஆற்றின் கரையோர பகுதிகளில் தண்ணீர் புகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு, நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

பேரிடர் மீட்பு படை முகாம்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு, புதுக்கடை, தேங்காய் பட்டிணம், கருங்கல் பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்தது. அங்குள்ள ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்திருப்பதால், பேரிடர் மீட்பு படையினர் நாகர்கோவில், குழித்துறை, நித்திரவிளையில் முகாமிட்டுள்ளனர். 

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தேனி, திண்டுக்கல்,  திருப்பூர், கோவை மாவட்டங்களில் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, ஈரோடு, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழையும், நாளை நீலகிரி, கோவையில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை எச்சரிக்கையால் நீலகிரி மாவட்டத்தின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வால்பாறை வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.