ஆண்களுக்கு அரசு பேருந்துகளில் அதிக கட்டணம்..!?  

பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்க, ஆண்களுக்கு டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் தவறானது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டியளித்துள்ளார்.

தமிழகத்தில் மகளிருக்கு நகரப் பேருந்துகளில் இலவச பயணம் செய்யும் திட்டம் முதல்வர் ஸ்டாலினால் அறிவிக்கப்பட்டது. மகளிருக்கு மட்டுமல்லாது மாற்றுத்திறனாளிகள் ,திருநங்கைகள் என அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த நிலையில், ஆண்களிடமிருந்து பேரூந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஓபிஎஸ் புகார் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் கட்டணமாக 5 ரூபாய் என்றிருந்த நிலையில் தற்போது ரூபாய் 10 வசூலிப்பதா?மகளிருக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பை ஆண்கள் தலையில் சுமத்துவதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேருந்தில் ஆண்களுக்கு ஓ. பன்னீர்செல்வம் கூறுவது போன்று அரசு பேருந்துகளில் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இதுவரை 6 கோடி பெண்கள் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தி உள்ளனர். தவறு செய்த ஒரு நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக குற்றம் சாட்டக்கூடாது என்றார்.